அனைவரையும் ஆசிர்வதியும்
ADDED :2166 days ago
சிலர் ஆண்டவரிடம்,“எனக்கு நல்லதே நடக்க வேண்டும். பணம் பெருக வேண்டும். கார் வாங்க வேண்டும். நிலச்சுவான்தார் ஆக வேண்டும். பத்து பங்களா வேண்டும். அழகான மனைவி வேண்டும், என் கணவர் லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும்’’ என பிரார்த்திக்கின்றனர். தான் மட்டுமே வாழ வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது. தன்னுடன் சேர்த்து பிறருக்காகவும் வேண்டுபவனின் பிரார்த்தனை மட்டுமே ஆண்டவரால் ஏற்கப்படும்.