பலவீனம் கூட நன்மை தரும்
ADDED :2116 days ago
ஒரு வாலிபர் விபத்துக்குள்ளாகி கால்களை இழந்தார். அதற்கு பதிலாக மரக்கால்கள் பொருத்தினார். அவர் ஒருமுறை ஆப்பிரிக்காவுக்கு சென்ற போது, காட்டுவாசிகளால் கடத்தப்பட்டார். அவர்களின் தலைவன், “இன்று நமக்கு நல்ல வேட்டை. இவனது மாமிசத்தை மகிழ்ச்சியாக உண்போம். அதற்கு முன்னதாக கை, கால்களை வெட்டி சூப் தயாரியுங்கள்’’ என உத்தரவிட்டான். அதைக் கேட்ட காட்டு மிராண்டிகள் வாலிபனை நெருங்கினர். அவனது கால்களை வெட்ட முயன்ற போது காலில் மரக்கட்டை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். விஷயம் அறிந்த தலைவனுக்கும் பயம் தொற்றியது. வாலிபன் மனிதப்பிறவியல்ல தெய்வப்பிறவி என்றும் நினைத்தான். “இவரது கால்கள் நம்மைப் போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது. இவரை துன்புறுத்தாதீர்கள்” என்று சொல்லி விடுவித்தான். பலவீனம் கூட, ஆண்டவர் நினைத்தால் நன்மையாகி விடும்.