உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவிலில் வளையல் திருவிழா

காளியம்மன் கோவிலில் வளையல் திருவிழா

செங்கல்பட்டு:திம்மாவரத்தில், சுயம்பு சிவகாளியம்மன் கோவிலில், நேற்று, வளையல் திருவிழா நடைபெற்றது.
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், செங்கல்பட்டு அடுத்த, திம்மாவரத்தில், புகழ்பெற்ற சுயம்பு சிவகாளியம்மன் கோவில் உள்ளது.இங்கு, ஆண்டுதோறும், தை மாதத்தில் நடக்கும் வளையல் திருவிழா, நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு துவங்கி, மதியம், 2:30 மணி வரை நடைபெற்றது. பின், வளையல் அலங்காரத்தில், அம்மன் எழுந்தருளினார். கல்யாணம் ஆகாத, குழந்தை இல்லாத பெண்கள், அம்மனுக்கு வளையல்களை அணிவித்து, வேண்டினர். திம்மாவரத்தை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து, அம்மனை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !