சபரிமலை வருமானம் ரூ.264 கோடி
ADDED :2141 days ago
சபரிமலை : சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு காலத்தில், 264 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இது, கடந்த ஆண்டை விட, 97 கோடி ரூபாய் அதிகம்.சபரிமலையில் நடப்பாண்டு, மண்டல, மகரவிளக்கு காலத்தில், 264 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது, கடந்த ஆண்டு, 167 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பாண்டு, 97 கோடி ரூபாய் அதிகம் கிடைத்துள்ளது. சபரிமலையில், இந்த சீசனில், அதிக அளவில் நாணயங்கள் குவிந்தன. 5 கோடி ரூபாய்க்கு நாணயங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. நாணயங்களை, பிப்., 5ல் எண்ணத் துவங்கி, மாசி மாத பூஜைக்காக, நடை திறக்கும் போது, முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 250 ஊழியர்கள் நியமிக்கப்படுவர் என, தேவசம் போர்டு தலைவர் வாசு கூறினார்.