அலங்காநல்லுார் தர்மசாஸ்தா கோயிலில் புஷ்ப வழிபாடு
ADDED :2179 days ago
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் தர்மசாஸ்தா கோயிலில் கார்த்திகை மாத சிறப்பு புஷ்ப வழிபாடு நடந்தது.சபரிமலை ஐயப்பன் கோயில் மகர சங்கராந்தி விழா நிறைவுற்றதையடுத்து இக்கோயிலில் 16 வகையான வண்ண மலர்களை கொண்டு சுவாமி படம் வரையப்பட்டது. 108 திருவிளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் குழுவினர் செய்தனர்.