நாகூர் தர்காவில் பாய்மரம் ஏற்றம்
ADDED :2082 days ago
நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூர் தர்கா, கந்தூரி விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை தர்காவின் அனைத்து மினவராக்களிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது.
நாகை அடுத்த நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா,463 வது ஆண்டு கந்தூரி விழா,வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்வாக பிப்.,4 ம் தேதி இரவு, நாகையில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, 5ம் தேதி அதிகாலை நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, நேற்று அதிகாலை, 6:30 மணிக்கு, தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப், துவா ஓதிய பின், தர்காவின் ஐந்து மினவராக்களிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான யாத்ரீகர்கள் கலந்து கொண்டனர்.