உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்பாபா கோவிலுக்கு தீர்த்தக்குட ஊர்வலம்

சாய்பாபா கோவிலுக்கு தீர்த்தக்குட ஊர்வலம்

சென்னிமலை: ஷீர்டி சாய்பாபா ரியான் அறக்கட்டளை சார்பில், சென்னிமலை, முகாசிபிடாரியூரில் ஜெம் கார்டனில், ஞானசாயி உலக சமாதான ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வரும், 30ல் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தம் எடுத்து நேற்று ஊர்வலமாக சென்றனர். கும்பாபி?ஷக விழா இன்று காலை தொடங்குகிறது. 30ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை தொடங்குகிறது. காலை, 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !