அக்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
ADDED :2074 days ago
ஆரணி அருகே, நூற்றாண்டுகள் பழமையான, அக்னீஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது. இதை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த, மேல்சீசமங்கலத்தில், நூற்றாண்டு பழமையான, கற்பகாம்பிகை உடனுறை அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதை முன்னிட்டு, யாகசாலை அமைக்கபட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், லட்சுமி பூஜை, உள்ளிட்ட யாகங்கள் செய்யபட்டன. பின்னர், மூலவருக்கு, யாகசாலையில் வைக்கப்பட்ட கலச நீரை கொண்டு சிறப்பு அபிஷேகமும், கமண்டல நாகநதி ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரைக்கொண்டு, கோவில் கோபுர கலசத்தின் மீது ஊற்றியும், மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்