திருவாசகம் முற்றோதுதல்: சிவனடியார்கள் பங்கேற்பு
ADDED :2120 days ago
ஆரணி: ஆரணி அருகே, நடந்த திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தசராப்பேட்டையில், விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, புதுச்சேரி சிவகீதா முத்தயைன் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, இதில், அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்று, திருவாசக பாடல்களை பாடி, சுவாமியை வழிபட்டனர்.