செஞ்சியில் இருந்து 300 பேர் திருப்பதிக்கு நடைபயணம்
ADDED :2077 days ago
செஞ்சி: செஞ்சியில் இருந்து 300 பேர் திருப்பதிக்கு நடைபயணம் சென்றனர். செஞ்சி திருவேங்கடகிரி கோவிந்த நாம சபா சார்பில் 20 வது ஆண்டாக திருப்பதி பாதயாத்திரை பயணம் சென்றனர். மாலை அணிந்து 48 நாள் விரதம் இருந்த பக்தர்கள் . செஞ்சி சிறுகடம்பூர் பாமா, ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பயணத்தை துவக்கினர். பயணக்குழுவினருக்கு பாத பூஜை செய்து அனுப்பி வைத்தனர். செஞ்சி வட்ட குருசாமி அனந்தவிஷ்ணு, தலைவர் சீத்தாராமன், செயலாளர் ரங்கன், பொருளாளர் பூங்காவனம் மற்றும் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் நடை பயணம் மேற்கொண்டனர்.