உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியாண்டவர் பூஜை புள்ளலுாரில் விமரிசை

பெரியாண்டவர் பூஜை புள்ளலுாரில் விமரிசை

புள்ளலுார்: புள்ளலுார் கிராமத்தில், பெரியாண்டவர் பூஜை வெகு விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் கிராமத்தில், பெரியாண்டவருக்கு மாபெரும் பூஜை முன்னிட்டு, 24ம் தேதி பதி விளக்கு பூஜை நடந்தது. பின், கரகம் வீதியுலா நிகழ்ச்சியும். நேற்றுமுன்தினம், காலை, 6:00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து,  62 அடி நீளமுள்ள பெரியாண்டவர் சிலை  வடிவமைக்கப்பட்டது.  மாலை, 6:30 மணிக்கு, பன்றி ஊர்வலமும், இரவு, 7:45 மணிக்கு, பெரியாண்டவர் பூஜை வெகு விமரிசையாக நடந்தது. புள்ளலுார் சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !