உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 30ல் துவக்கம்
ADDED :2079 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், வரும் வியாழக்கிழமை காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்யதேச தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த கோவிலிலில், வரும், 30ம் தேதி, காலை, 7:30 மணி முதல், 9:00 மணிக்குள், பிரம்மோற்சவ கொடியேற்றப்படுகிறது. முக்கிய உற்சவமான கருடசேவை, மூன்றாம் நாளும்; தேர் திருவிழா, ஏழாம் நாளும் நடைபெறுகிறது. பிப்ரவரி, 8ல், திருவிழா நிறைவு பெறுகிறது.