பழனி பாதயாத்திரை குழுவினரின் 3ம் ஆண்டு வேல் வழிபாட்டு பூஜை
ADDED :2180 days ago
சென்னை: வடபழனியில் உள்ள தைப்பூச பழனி பாதயாத்திரை குழுவினர் நாளை 29.1.20 புதன்கிழமையன்று மூன்றாம் ஆண்டாக, வடபழனி முருகன் கோவில் வடக்கு மாட வீதியில் அமைந்துள்ள கோபால் திருமண மண்டபத்தில், முருகப்பெருமானின் திருவுருவப்படத்தில் மலர் பூஜை செய்து, வேலுக்கும் வழிபாடு பூஜை செய்கின்றனர்.
நிகழ்ச்சி நிரல்
காலை 09.30 மணிக்கு விநாயகா் அனுஞ்யை, அதனை தொடர்ந்து மலா் பூஜை.
காலை 11.15 மணிக்கு வேல் வழிபாடு, திருமுருக பக்த மெய்யன்பர்கள் திருக்கரங்களால் சிறப்பு வேல் பூஜை நடைபெறும்.மதியம் 12.15 மணிக்கு மஹாதீப ஆராதனை நடைபெறும். அதனை தொடா்ந்து அன்ன பிரசாதம் வழங்கப்படும்.