குமரி வெங்கடாஜலபதி கோயிலில் மாதந்தோறும் திருக்கல்யாணம்
ADDED :2129 days ago
நாகர்கோவில்: கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோயிலில் மாதம் தோறும் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடைபெறும், என திருப்பதி தேவஸ்தான தலைவர் சேகர்ரெட்டி கூறினார்.
கன்னியாகுமரியில் அவர் கூறியதாவது: கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் வருஷாபிஷேகம் முடிந்துள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு சனிக்கிழமைகளில் லட்டு வழங்கப்படும். இது 15 நாட்களுக்குள் அமலுக்கு வரும். கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் கோயிலுக்கு வர வசதியாக இலவச பஸ் இயக்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இங்கு இனி மாதம் தோறும் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெறும். திருமண மண்டபம் கட்ட விவேகானந்தா கேந்திரா இடம் தருவதாக கூறியுள்ளது. திருப்பதி கோயில்களை மத்திய- மாநில சுற்றுலா வரை படத்தில் உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.