இருந்தபடி ஆடும் சபைக்கூத்து
ADDED :2244 days ago
நடராஜப் பெருமான், அமர்ந்தபடியே யோக ராஜனாக இருந்தும் ஆடுகின்றார். இது, இருந்ததும் கூத்து எனப்படும். இருந்ததும் கூத்தர் தியாகராஜர் எனப்படுகிறார். அவர் இருந்தபடியே ஆடும் இடமும் சபை என்றே அழைக்கப்படுகிறது. அதில் அரச சபைக்குரிய வீரவாள், அஷ்ட மங்கலம், இன்னிசை ஆடல்பாடல்கள் நிறைந்திருக்கின்றன. தியாகராஜரின் நடனம் யோகியர்களால் கொண்டாடப்படும் சபையாதலால் யோக சபை எனப்படுகிறது. அவரது வித்தை, யோக வித்தையாகும். பிரபஞ்சத்தை நடத்துபவராகச் சபையில் கொலுவீற்றிருக்கும் ஈசனும் சபாநாயகன் எனப்படுகிறார்.