அம்பலத்தின் வகைகள்
ADDED :2407 days ago
அம்பலம் என்பது சோலைகளின் நடுவில் பெரிய மரத்தின் கீழ் அமைந்த மேடையாகும். ஆதியில் தில்லை வனத்தின் நடுவே இருந்த பெரிய ஆலமரத்தின் கீழ் அமைந்திருந்த மேடையில் பெருமான் ஆடினார். அதையொட்டியே அது அம்பலம் எனப்பட்டது. அம்பலம் என்னும் பெயராலேயே ஐம்பெரும் சபைகளும் அழைக்கப்படுகின்றன. சிதம்பரம் - சிற்றம்பலம், தில்லையம்பலம், பொன்னம்பலம் என்றும்; மதுரையில் உள்ள சபை வெள்ளியம்பலம் என்றும்; திருவாலங்காட்டுச் சபை மணியம்பலம் என்றும்; திருநெல்வேலி சபை செம்பொன் அம்பலம் என்றும்; திருக்குற்றாலச் சபை ஓவிய அம்பலம் என்றும் அழைக்கப்படுகின்றன.