இளவயது அம்மன்
ADDED :4949 days ago
கவுமாரம் என்பது முருகனை முழுமுதற்பொருளாகக் கொண்ட வழிபாடாகும். இந்த முருகனையே பெண்சக்தியாக்கி வழிபடும் போது தேவி கவுமாரி என்று வழங்கப்படுகிறாள். கவுமாரி என்றால் இளையவள். அத்திமரத்தின் அடியில் வீற்றிருப்பாள். மயில் இவளுக்கு வாகனம். பிரதானமான இருகரங்களில் ஒன்று வரதஹஸ்தமாகவும், மற்றொன்று அபயஹஸ்தமாகவும் உள்ளது. மற்ற கைகளில் வேல், சேவல்கொடி, தண்டம், வில், பாணம், கந்தம், பத்மம், பத்ரம், பரசு ஆகியன இடம்பெற்றிருக்கும். முருகனைப் போலவே இவளுக்கும் சிவந்த மலர்கள் உகந்தவை. வீரத்தின் வெளிப்பாடாகத் திகழும் கவுமாரியை வழி பட்டோருக்கு வேண்டாத பயம் நீங்கும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். வாரநாட்களில் செவ்வாய்க்கிழமை ஏற்றது. சப்தமாதர் வரிசையில் கவுமாரி 6வதாக கொலு வீற்றிருப்பாள்.