உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கோத்திரா பூஜை

கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கோத்திரா பூஜை

சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 102 கோத்திரா பூஜைகளும், 50 ஆயிரம் வெற்றிலையில் அம்மனுக்கு அலங்காரம், வேள்வி பூஜை நடந்தது. அதனையொட்டி, சுவாமிக்கு 17 வகை சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு 102 கோத்திரா பூஜைகளும், வெற்றிலை மாலையும் சாத்தப்பட்டது. பூஜையில் ஆர்ய வைசிய மகிளா மற்றும் இளைஞர் மன்றத்தினர், வாசவி கிளப் வனிதா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !