குமாரபாளையத்தில் கோபுர கலசங்களுக்கு சிறப்பு வழிபாடு
ADDED :2129 days ago
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், கும்பாபிஷேக கலசங்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. குமாரபாளையம் அருகே, வட்டமலை வேப்பமரத்து காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
நேற்று முன்தினம், காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நேற்று, கோபுர கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டது. இதையொட்டி மூலவர் அம்மன் திருவுருவச்சிலைக்கும், விநாயகர், பாலமுருகன், கருப்பண்ண சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், கோபுர கலசங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் முதற்கால யாக பூஜைகள் நடந்தன. இன்று, இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜை நடைபெறவுள்ளது. நாளை காலை, 8:50 மணிக்கு விமான கோபுர கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.