வேதபுரீஸ்வரர் ரதசப்தமி பிரமோற்சவ விழாவில் 63 நாயன்மார்கள் வீதி உலா
ADDED :2129 days ago
செய்யாறு: செய்யாறு, வேதபுரீஸ்வரர் கோவிலில் ரதசப்தமி பிரமோற்சவ விழாவில் நேற்று, 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூரில், பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில், ரதசப்தமி பிரமோற்சவ விழா கடந்த, 26ல், கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று அதிகாலை, கோவில் நடை திறக்கப்பட்டு, வேதபுரீஸ்வரர், பாலகுஜாம்பிகை அம்மன் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபி?ஷகம், பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, 63 நாயன்மார்கள் வீதி உலா மற்றும் சந்திரசேகரர் சுவாமி வீதி உலா நடந்தது. இரவு தோட்ட உற்சவத்தில், யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.