2 ஐம்பொன் சிலைகள் தஞ்சாவூரில் கண்டெடுப்பு
ADDED :2129 days ago
தஞ்சாவூர்: தஞ்சை அருகே, வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, இரண்டு, ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
தஞ்சாவூர் அடுத்த, தேவராயர்பேட்டை கிடங்காந2 ஐம்பொன் சிலைகள் தஞ்சாவூரில் கண்டெடுப்புத்தம் பகுதியைச் சேர்ந்தவர், ராமலிங்கம், 62; விவசாயி.இவர், நேற்று முன்தினம் மாலை, வீடு கட்ட, தொழிலாளர்கள் மூலம் பள்ளம் தோண்டினார். சிறிது ஆழத்தில், இரண்டு ஐம்பொன் சிலைகள் கிடைத்தன. இது குறித்து ராமலிங்கம், பாபநாசம் தாசில்தார் கண்ணனுக்கு தகல் அளித்துள்ளார்.சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார், சிலைகளை கைப்பற்றினார். அவை, 3 அடி விஷ்ணு சிலை மற்றும் 2 அடி அம்பாள் சிலை என, தெரிய வந்தது.கண்டெடுக்கப்பட்ட சிலைகள், தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சிலைகள், எந்த நுாற்றாண்டை சேர்ந்தவை என, தொல்லியல் துறையினர் மூலம் கண்டறிய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.