உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை

சிவன் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை

கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டத்தில், ஆளவந்திஸ்வரர் சிவன் கோவிலில், நான்காம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழையஜெயங்கொண்டம் பகுதியில் ஆளவந்திஸ்வரர் சிவன் ஆரணவல்லி தாயார் கோவில் உள்ளது. நான்காம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை விழா, நேற்று காலை 9:00 மணிக்கு கோவிலில் துவங்கியது. தொடர்ந்து சுவாமிகளுக்கு பல்வேறு வகையான அபி ?ஷகம், பூஜை செய்து அலங்காரம் செய்யப்பட்டது. பிறகு தீபாராதனை காட்டப்பட்டது. இரவு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !