தை கிருத்திகை: வடபழனி ஆண்டவர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :2129 days ago
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில் தைகிருத்திகையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வடபழனி முருகன் கோவிலில், மாதம்தோறும் நடக்கும் கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து மூலவரை வழிப்படுவர். இன்று தை கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலை முதல் பக்தர்கள் அதிகளவில் கோவிலில் குவிந்தனர். மூலவருக்கு பால், பன்னீர், தேன், விபூதி போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. வடபழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.