முத்தாலம்மன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு
ADDED :2128 days ago
பரமக்குடி:பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆயிர வைசிய இளைஞர் சங்கம் சார்பில் 34ம் ஆண்டு திருவிளக்கு வழிபாடு நடந்தது. ஆயிர வைசிய சபை தலைவர் போஸ் தலைமை வகித்தார். மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்தாலம்மன் கோயில் தேவஸ்தான டிரஸ்ட்டிகள் பாலசுப்பிரமணியன், ஜெயராமன், ரவீந்திரன் முன்னிலை வகித்தனர்.சங்க பொதுச் செயலாளர் லெனின் குமார் வரவேற்றார். அறநிலையத்துறை ஆய்வாளர் கர்ணன் திருவிளக்கு வழிபாட்டை துவக்கி வைத்தார். மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர்.