உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி காவடிக்கு சிங்கம்புணரியில் வரவேற்பு

பழநி காவடிக்கு சிங்கம்புணரியில் வரவேற்பு

சிங்கம்புணரி:சிங்கம்புணரி வழியாக பழநிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
தை பூசத்திற்கு பழநிக்கு பாதயாத்திரையாக செல்ல, சிங்கம்புணரி சுற்றுப்பகுதி கிராம பக்தர்கள் மாலை அணிந்து கடந்த ஒரு மாதமாக விரதமிருந்தனர். நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி,ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பல திசைகளிலிருந்தும் சிங்கம்புணரிக்கு கடந்த சில நாட்களாக வந்து,அங்கிருந்து பழநிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.நேற்று காலை நகரத்தார் அரண்மனை பொங்கல் காவடி, தேவகோட்டை மற்றும் காரைக்குடி நகரத்தார் காவடி மற்றும் மாட்டு வண்டியில் வைரவேலுடன் சேவுகப்பெருமாள் கோயிலுக்கு வந்தனர். இவர்கள் காரைக்குடி, தேவகோட்டை, கண்டனுார், புதுவயல் உள்ளிட்ட செட்டிநாடு பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த 400 ஆண்டுகளாக நடைபயணமாக காவடி எடுத்து வருகின்றனர். நேற்று சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலுக்கு சர்க்கரை காவடி, விபூதி காவடி, மயில்காவடி என 365 காவடிகள் வந்தன. அங்கு மூலவருக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. சிங்கம்புணரி கிராமத்தார், வர்த்தகர், பொது மக்கள் சார்பில் பல இடங்களில் காவடிக்கு வரவேற்பளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம்,மருத்துவ வசதி செய்யப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !