கால பைரவருக்கு வளர்பிறை அஷ்டமி பூஜை
ADDED :2128 days ago
ஊத்துக்கோட்டை:எல்லாபுரம் ஒன்றியம், தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள மஹா கால பைரவர் கோவிலில், நேற்று, காலை, 11:00 மணிக்கு, வளர்பிறை அஷ்டமி விழா நடந்தது.மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.பின், மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.