பிப். 9ம் தேதி திருமலையில் கருட சேவை
ADDED :2128 days ago
திருப்பதி: திருமலையில், வரும் பிப்., 9ம் தேதி, பவுர்ணமியை ஒட்டி, கருடசேவை நடக்க உள்ளது. திருமலையில், மாதந்தோறும், பவுர்ணமி இரவு வேளைகளில் கருடசேவையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, பிப்., 9ல், தை மாத பவுர்ணமியை ஒட்டி கருட சேவை நடக்க உள்ளது. மலையப்பசுவாமி அன்றிரவு, 7:00 மணிமுதல், 9:00 மணி வரை கருட வாகனத்தில் மாடவீதியில் வலம் வர உள்ளார்.