பிரிந்த சகோதரர் ஒன்று சேர!
ADDED :4952 days ago
வாரத்தில் மூன்றாம் நாள் செவ்வாய். செவ்வாயோ வெறும்வாயோ? என்று சொல்வதுண்டு. அதனால், செவ்வாயன்று சுபவிஷயங்களைச் செய்யத் தயங்குவர். ஆனால், இந்த நாளை மங்களவாரம் என்று ஜோதிடசாஸ்திரம் சிறப்புடன் குறிப்பிடுகிறது. தமிழகத்தில் செவ்வாய்க்கிழமையில் முகூர்த்தநாள் குறிப்பதில்லை. ஆனால், கேரளமக்கள் மங்களவாரம் என்று செவ்வாயன்றும் திருமணவைபவம் நடத்துவர். செவ்வாயன்று முருகன், ராகுகாலத்தில் துர்க்கை, காளி,மாரி ஆகியோரை விரும்பி வழிபடுவர். நவக்கிரகத்தில் செவ்வாயை சகோதரகாரகர் என்று குறிப்பிடுவர். இவரை வழிபட்டால் சகோதரர் உறவு பலப்படும். பிரிந்த சகோதரர்கள் ஒன்றுசேர, செவ்வாய்க்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபடவேண்டும்.