உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவில் திருவிழா: பொங்கல் வைத்த பெண்கள்

அம்மன் கோவில் திருவிழா: பொங்கல் வைத்த பெண்கள்

சேலம்: மாரியம்மன் கோவில் திருவிழாவில், திரளான பெண்கள் பொங்கல் வைத்தனர். சேலம், அழகாபுரம், மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவு, சக்தி அழைப்பு நடந்தது. தொடர்ந்து, வீரகாரன் பிடாரி அம்மன், மாரியம்மனுக்கு, திரளான பெண்கள் பொங்கல் வைத்தும், மா விளக்கு எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை, கிடாவை காவு கொடுத்தனர். தொடர்ந்து, அலகு குத்துதல், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இரவில், திரவுபதி அம்மனுக்கு, பக்தர்கள், அக்னி கரகம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மாலை, எருதாட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !