உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றுலா தலமாக்க வலியுறுத்தல்

தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றுலா தலமாக்க வலியுறுத்தல்

அரூர்: தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை, சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்தி உள்ளது. அரூரில், பா.ஜ., புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம், மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமையில் நடந்தது. அரூர், அரசு மருத்துவ மனையில் கூடுதலாக மருத்துவர்களை நியமனம் செய்வதுடன், தேவையான மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும். தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். அரூர் டவுன் பஞ்சாயத்தை, நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். அரூர் நகரில், கழிவு நீர் கால்வாய் வசதிகளை மேம்படுத்த வேண்டும். அரூரில் இருந்து, திருப்பதி, பழனி, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்களை இயக்க வேண்டும். காவிரியில் செல்லும் உபரிநீரை தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நிரப்ப வேண்டும். நரிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர், கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !