ராமேஸ்வரத்தில் விநாயகர் தெப்ப தேர்
ADDED :2073 days ago
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயில் உபகோயிலான லெட்சுமணேசுவரர் கோயில் குளத்தில் விநாயகர் தெப்ப தேர் உலா நடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து வெள்ளி மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் புறப்பாடாகி திட்டகுடி, நடுத்தெரு, மேலத்தெரு வழியாக வீதி உலா வந்து லெட்சுமணேசுவரர் கோயிலில் எழுந்தருளினார். இரவு லெட்சுமணர் தீர்த்த குளத்தில் அலங்கரித்த தெப்ப தேரில் விநாயகர் எழுந்தருளியதும், பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து வலம் வந்தனர்.அப்போது தெப்பத்தை சுற்றி இருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்று (பிப்.8) தைப்பூச தெப்ப தேரோட்டத்தையொட்டி கோயிலில் இருந்து காலை 10:30 மணிக்குசுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி புறப்பாடாகியதும் கோயில் நடை அடைக்கப்படும். பின் லெட்சுமணேசுவரர் தீர்த்த குளத்தில் இன்று மாலை தைப்பூச தெப்ப தேரோட்டம் நடக்கிறது.