உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

முத்துக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் மேலசேந்தனேந்தல் முத்துக்காளியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
முத்துக்காளியம்மன் கோயிலில் 2008 ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம் மற்றும் பல்வேறு பூஜைகளுடன் முதற்கால யாக சாலை பூஜைகளும், பூர்ணாகுதி தீபாராதனையும் நடைபெற்றது.
நேற்று காலை 6:35 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், 9:05 மணிக்கு கோ பூஜை நடந்தது.
பின் யாக சாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் காலை 10:10 மணிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷே விழா நடைபெற்றது.பின், பரிகார தெய்வங்களான ராக்கச்சி, பேச்சி அம்மன், வீரபத்திரர், விநாயகர், ஐயனார், ஆதிமுத்து காளி,
பதினெட்டாம்படி கருப்பர் ஆகிய தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, மூலவர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவில் கோயமுத்தூர் சுப்பிரமணியன் அய்யர் வகையாறாவினரும், மேலச்சேந்தல் கிராம பொதுமக்கள் மற்றும் குல தெய்வக்காரர்கள் உட்பட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடை பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !