உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலையில் தைப்பூச தேர்த்திருவிழா

மருதமலையில் தைப்பூச தேர்த்திருவிழா

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன், தைப்பூச திருவிழா துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தைப்பூச தேர்த்திருவிழா இன்று(பிப்.,8)  நடைபெற்றது. அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை, 5:00 மணிக்கு யாகசாலை பூஜையும், காலை, 7:00 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. காலை, 10:40 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதமாக, வெள்ளை யானையில், திருவீதி உலா வந்து, மேஷ வாகனத்தில் திருத்தேரில் எழுந்தருளுதலும், அதன்பின் காலை, 11:30 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்து இழுத்தாலும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !