ராமகிரியில் கும்பாபிஷேகம்
ADDED :2073 days ago
குஜிலியம்பாறை, பாளையம் பேரூராட்சி ராமகிரியில், கல்யாண நரசிங்க பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கரூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த நீர் கொண்டுவரப்பட்டு, கணபதி ஹோமம், கோ பூஜை, கஜபூஜை, வாஸ்து சாந்தி, அக்னி ஆராதனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. குஜிலியம்பாறை, பாளையம், கோவிலுார், வேடசந்துார் சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர். விழாக்குழுவினர் சாமியப்பன், கருப்பண்ணன், வீரப்பன், பொன்னுராம் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.