சீதளா தேவி கோவிலில் திருவிளக்கு பூஜை; திரளான பெண்கள் வழிபாடு
மயிலாடுதுறை; மொழையூர் சீதளா தேவி கோவிலில் திரு விளக்கு பூஜை நடைபெற்றது. திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை அருகில் மொழையூர் கிராத்தில் நூற்றண்டுகள் பழமையான சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் நேற்று தை மாத சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் மலர் அலங்காரமும் செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது விநாயகர் பூஜை, அம்னுக்கு 108 தமிழ் அர்சனை, அபிராமி அந்தாதி, தேவாரம், திருவாசகம், பாராயணத்துடன் கூட்டு வழிபாடு செய்யப்பட்டு அம்பாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள், மாங்கல்ய கயிறு, பழங்கள், வளையல், வெற்றிலை பாக்கு உள்ளிட்ட மங்கல பொருட்களும் வழங்கப்பட்டு, அன்னதானம் நடைபெற்றது. விசுவ ஹிந்து பரிஷத் மண்டல செயலாளர் செந்தில்குமார் ஒருங்கிணைத்து நடத்தி வைத்தார். கருப்ப சாமி கோவில் நிர்வாகி, பூசாரிகள் பேரவை மாவட்ட அப்பாளர் கோபிநாதன், சமூக ஆர்வலர் திருலோக சந்தர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.