நத்தம் சேர்வீடு வேட்டைக்காரன் சுவாமி கோயில் விழா
ADDED :185 days ago
நத்தம்: நத்தம் அருகே சேர்வீடு வேட்டைகாரன் சுவாமி கோயில் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி சேர்வீட்டில் இருந்து வேட்டைகாரன் சுவாமி, குதிரை, மதலை சிலைகள் ஊர்வலமாக நத்தம் அவுட்டர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சுவாமிக்கு கண் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மேளதாளம், அதிர்வேட்டு முழங்க முக்கிய வீதிகள் வழியாக சுவாமி நகர் வலம் வந்து சேர்வீடு சென்றது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.