கோதண்டராமர் கோவிலில் ராமபஜனை
ADDED :2064 days ago
செஞ்சி:செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ராம பஜனை நடந்தது.செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கிருஷ்ணவேணி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோதண்டராமர் கோவிலில் தை மாத ராம பஜனை நடந்தது.இதை முன்னிட்டு காலையில் கோதண்டராமர், நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 9 மணிக்கு ஸ்ரீராமர் பஜனை தொடங்கியது இதில் ராமமூர்த்தி திருமால் வணக்கம் செய்தார்.கோதண்டராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகி துறை பாரதிராஜா முன்னிலை வகித்தார். ஜெயராமன், ஜனார்தனன் தலைமை தாங்கினர். விழா குழுவினர் சாமிகண்ணு, பெருமாள், அருணகிரி, அப்பு ராமு, ராஜி, ராமசாமி, சுதர்சனம், ஞானசேகர், கிருஷ்ணவேணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஜானகிராமன் நன்றி கூறினார்.