சீதாலட்சுமி ஞானாலயம் கும்பாபிஷேகம்
ADDED :2169 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஆர்.எம்.எஸ்.,காலனி சீதாலட்சுமி ஞானாலயம் கும்பாபிஷேகம் நடந்தது. ஓதுவார்கள் சந்திரசேகர், சண்முகநாதன் தேவாரம், திருவாசகம் பாட சிவாச்சார்யார் தட்சிணாமூர்த்தி கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். அன்னை சீதாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. ஏற்பாடுகளை ராதானந்தம் அறக்கட்டளையினர் செய்தனர்.