பழநியில் தைப்பூச விழா கொடி இறக்குதலுடன் நிறைவு
ADDED :2380 days ago
பழநி: பழநியில் தைப்பூசத் திருவிழா கடந்த பிப்.2ல் பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவையொட்டி முத்துக்குமராசுவாமி வள்ளி தெய்வானை சமேதமாக பல்வேறு வாகனங்களில் திருவுலா நடந்தது. பிப்.7ல் திருக்கல்யாணம் வெள்ளித் தேரோட்டம் நடந்தது பிப்.8ல் தைப்பூச தேரோட்டம் நடந்தது. தினமும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தரிசித்தனர். அலகு குத்தியும் காவடிகள் தீர்த்த குடங்கள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நிறைவு நாளான நேற்று இரவு 8:30 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயில் தேரடி தெப்பக்குளத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் தெப்போற்ஸவம் நடந்தது. இரவு கொடி இறக்குதலுடன் தைப்பூசவிழா நிறைவடைந்தது.