உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தையூர் சுப்ரமணியர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

தையூர் சுப்ரமணியர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி: தையூர் சுப்ரமணியசாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி தாலுக்கா தையூர் கிராமத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் திருப்பணிகள் செய்து புதிதாக மகா மண்டபம் அமைத்து மகா கும்பாபிஷேக விழா நடந்தது.  இதை முன்னிட்டு கடந்த 7 ம் தேதி மாலை 4 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபூஜை ஆகியனவும், முதல்கால யாகசாலை பூஜையும் நடந்தது . 8 ம்தேதி காலை 4 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 5 மணிக்கு மகா பூர்ணாஹுதியும், தொடர்ந்து யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !