உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீதேவி கருமாரியம்மனுக்கு கும்பாபிஷேக விழா

ஸ்ரீதேவி கருமாரியம்மனுக்கு கும்பாபிஷேக விழா

திருப்போரூர்: மேலக்கோட்டையூர் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேகம், இன்று நடைபெறுகிறது. கேளம்பாக்கம்- – வண்டலுார் சாலை, மேலக்கோட்டையூரில், பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாக, ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடிப்பூர விழா உள்ளிட்ட பல விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இக்கோவிலில், சில மாதங்களாக திருப்பணிகள் நடந்து வந்தன. தற்போது முடிவடைந்து, கும்பாபிஷேக விழாவுக்கு, கோவில் தயாரானது.

இதையடுத்து, இன்று காலை, 9:00 மணிக்கு, கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மூலவர், விநாயகர், பாலமுருகர், வீரபத்திரர், கருப்பண்ண சுவாமி, நவக்கிரகங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.  தொடர்ந்து, மகா துாப தீப ஆராதனையுடன், பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது. முன்னதாக, விழாவை ஒட்டி, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !