உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமுண்டீச்சரம் சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேக விழா

திருமுண்டீச்சரம் சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேக விழா

திருவெண்ணெய்நல்லுார்:திருவெண்ணெய்நல்லுார் அடுத்த திருமுண்டீச்சரம் சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு விநாயகர் பூஜை, வருண பூஜை, சோம கும்பபூஜைகள் நடந்தது. தொடர்ந்து 8:00 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜையும், 9:00 மணிக்கு கலசங்கள் புறப்பாடாகி 9:40 மணிக்கு அனைத்து விமான ராஜகோபுரங்களுக்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில், இந்து அறநிைலயத்துறை விழுப்புரம் மாவட்டம், இணை ஆணையர் செந்தில்வேலவன், மண்டல குழுத் தலைவர் சந்தோஷ்குமார், ஆய்வாளர் பாலமுருகன், செயல் அலுவலர் ஸ்ரீகன்யா, உபயதாரர் சத்தியமூர்த்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இதேபோல் ஏனாதிமங்கலம் சட்டிசாமியார் கோவில் வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த அரசமரத்தடியில் செல்வ வலம்புரி விநாயகர் சிலைக்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி ஏற்பாட்டின் பேரில் கும்பாபிஷேகம் நடந்தது.இதேபோல் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த துலகம்பட்டு ஏரிக்கரையில் உள்ள அங்காளம்மன் சிலைக்கு அரசமங்களம் ருக்மணி தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !