உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம்

பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம்

வீரபாண்டி: அரசமர பிள்ளையார் கோவில் கும்பாபி?ஷகம் நடந்தது. ஆட்டையாம்பட்டி, காகாபாளையம் சாலை, தானகுட்டிபாளையம், அரசமர அடியில், சிறு விநாயகர் சிலை வைத்து, மக்கள் பூஜை செய்து வந்தனர். கடந்தாண்டு, அரசமர பிள்ளையார் கோவில் கட்ட, ஊர்மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு, கோவில் கட்டப்பட்டது. அதன் கும்பாபி?ஷக விழா, புனித தீர்த்தம் எடுத்து வருதலுடன், நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக, ஈரோடு பவானி, மேட்டூர் காவிரி, சித்தர்கோவில் ஊற்றுக் கிணறு ஆகியவற்றிலிருந்து, திரளான பக்தர்கள் புனிதநீரை எடுத்துக்கொண்டு, ஆட்டையாம்பட்டி, பெரிய மாரியம்மன் கோவிலிலிருந்து, ஊர்வலமாக, பிள்ளையார் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து, அரசமர பிள்ளையார், நாகர், ராகு கேது பரிவார தெய்வ சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்து கண் திறக்கப்பட்டது. நேற்று காலை, புனிதநீர் கலசங்களை, சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்து, மூலவருக்கு அபி?ஷகம் செய்து, கும்பாபி?ஷகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது, தரிசனம் செய்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !