உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காகத்தில் வீரமாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

காகத்தில் வீரமாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி யூனியன், காகம் பஞ்சாயத்தில் ராவுத்த குமாரசாமி, வீரமாத்தியம்மன் கோவில் கட்டட திருப்பணிகள் அண்மையில் முடிந்தன. கடந்த, 9ல் கிராமசாந்தி நடந்ததுடன், சுவாமிக்கு கணபதி ?ஹாமம், நவக்கிர ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு ராவுத்தர் குமாரசாமி, கன்னிமார் மற்றும் வீரமாத்தியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபி?ஷக விழா கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கானோர் சுவாமியை தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமிக்கு தசதானம், தசதரிசனம், சிறப்பு பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்ததுட, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !