கபாலீஸ்வரர் கோவில் கோசாலை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலுக்கு மாற்றம்
ADDED :2069 days ago
ஈரோடு: திருப்பணிகள் நடக்கும் காரணத்தால், கோட்டை கபாலீஸ்வரர் கோவில் கோசாலை, கஸ்தூரி அரங்கநாதர் கோவிலுக்கு இடம் மாற்றப்பட்டது. ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் கும்பாபி ?ஷகம், 2021 ஜனவரிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திருப்பணிகள், நான்கு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. தரைத்தளம் அமைத்தல், வண்ணம் தீட்டுதல், மழை நீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள், 50 சதவீதம் நடந்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள அன்னதானக்கூடம், கோசாலை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், பசு மாடுகளுக்கு உணவு பண்டங்கள் எதுவும் நேரடியாக கொடுக்கக்கூடாது. எதுவாக இருந்தாலும் அலுவலகத்தில் தான் ஒப்படைக்க வேண்டும் என, கோவில் பணியாளர்கள் கூறினர்.