உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமாயண தகவல்களுடன் பக்தர்களுக்கு புதிய ரயில்

ராமாயண தகவல்களுடன் பக்தர்களுக்கு புதிய ரயில்

புதுடில்லி: பக்தர்களின் வசதிக்காக, ராமாயணம் குறித்த தகவல்கள் நிரம்பிய பெட்டிகள் மற்றும் பஜன்களுடன், புதிய ரயில் சேவை துவக்கப்பட உள்ளது.

இது குறித்து, ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் கூறியதாவது:ராமாயணம் குறித்த தகவல்கள் நிரம்பிய ரயில் பெட்டிகள் மற்றும் பஜன்களுடன், புதிய ரயில் சேவை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் துவக்க விழா, மார்ச், ௧௦ம் தேதிக்கு பின் நடைபெறும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இயக்க முடிவு செய்துள்ள

இந்த ரயில்களின் உட்புறம் மற்றும் வெளிப்புறம், ராமாயணத்தின் கருவை மையமாக வைத்து அமைக்கப்படுவதுடன், பக்தர்களுக்காக பஜன்கள் ஒலிபரப்பாகும். ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில், புதிய ரயிலின் கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஹோலி பண்டிகைக்கு பின் ரயிலை இயக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.கடந்த நவ., ௧௪ம் தேதி முதல், ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், ராமருடன் தொடர்புடைய நந்திகிராம், சீதாமாரி, ஜனக்பூர், வாரணாசி, பிரயாக், ஷிரிங்வேர்பூர், சித்ரகூட், நாசிக், ஹம்பி, அயோத்தி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது. ஆனால், புதிதாக அறிமுகமாகும் ரயில்இயக்கப்படும் நகரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !