பழநியில் பக்தர்கள் காத்திருப்பு
ADDED :2409 days ago
பழநி : பழநி முருகன் கோயில் நேற்று ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு வெளி மாவட்டம், மாநில பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
அதில் பலர் காவடிகள், தீர்த்த குடங்கள் எடுத்து வந்தனர். திரு ஆவினன்குடி கோயில், பெரியநாயகி அம்மன் கோயில், மலைக்கோயிலில் பக்தர்கள் காவடி ஆட்டம் மேளதாளத்துடன் ஆடி நேர்த்தி கடன் செலுத்தினர். கூட்டம் அதிகரித்ததால் ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்தினர். பொது தரிசன வழியில் மூன்று மணிநேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இரவு தங்கரத புறப்பாட்டில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.