ராமேஸ்வரத்தில் ஆதியோகி ரதம் : பக்தர்கள் தரிசனம்
ADDED :2157 days ago
ராமேஸ்வரம் : ஈஷா யோகா மையம் சார்பில் ராமேஸ்வரம் வந்த ஆதியோகி சிலை ரதத்தை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மாசி மகாசிவராத்திரி விழா யொட்டி ஈஷா யோகா மையம் சார்பில் கோவை வெள்ளியங்கிரி இருந்து ஜன.,20 ல் அதியோகி சிலை ரத யாத்திரை பயணம் துவங்கியது. இந்த ரதம் தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, கன்னியகுமரி வழியாக ராமேஸ்வரம் வந்தது.பின் ஏராளமான பக்தர்கள் ஆதியோகி சிலை ரதத்தை வரவேற்று மாலை அணிவித்து தரிசனம் செய்தனர். பின் இங்கிருந்து ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை வழியாக பிப்.,17 ல் கோவை வெள்ளியங்கிரி செல்ல உள்ளதாகவும், பிப்.,21 ல் நடக்கும் மாசி மகாசிவராத்திரி விழாவில் இச்சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும் என ஈஷா யோகா அமைப்பினர் தெரிவித்தனர்.