உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சிவராத்திரி: சதுரகிரியில் பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி

மகா சிவராத்திரி: சதுரகிரியில் பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி

ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, பிப்., 21 - 24 வரை, நான்கு நாட்களுக்கு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, குளியலறை மற்றும் அடிப்படை வசதிகள், அறநிலையத் துறை சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. பிப்., 21ல், மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.பக்தர்களுக்கு அன்னதானம், போக்குவரத்து, பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு வருவதாக, செயல் அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !