சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா
ADDED :2100 days ago
அந்தியூர்: அந்தியூர் அருகே, அண்ணமார்பாளையத்தில் சக்தி விநாயகர், சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் பவானி, கூடுதுறைக்கு சென்று, அங்கிருந்து புனித நீரை தீர்த்தமாக எடுத்து கொண்டு வந்தனர். தொடர்ந்து, நேற்று காலையில் இருந்து பல்வேறு வேத மந்திரங்கள் ஓதி, கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அந்தியூர், தவிட்டுப்பாளையம், கரட்டுப்பாளையம், ஈசப்பாறை உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.